districts

img

122 ஆண்டுகளில் இல்லாத அளவில் மார்ச்சில் அதிக வெயில் பதிவு

சென்னை, ஏப். 3 - தமிழகத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக்காலத்தில் ஏப்ரல், மே மாதங்க ளில் வெயில் அதிகமாக இருக்கும். மே மாதம் வெயில் தாக்கம் உச்ச நிலையில் காணப் படும். இதற்கு மாறாக மார்ச் மாதத்திலிருந்து வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகி ரியை தாண்டியுள்ளது. இது 122 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்ததாக இந்திய வானி லை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன. 1901ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெயில் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தற்போது உள்ளது. மார்ச் மாத சராசரி வெயில் 91.56 டிகிரி ஆகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் மார்ச் மாதம் சராசரி வெயில் 91.41 டிகிரி யாக இருந்தது. காலநிலை மாற்றம் கடுமையான வானிலை தீவிரத்தையும், கால அளவையும் பாதிக்கிறது. மார்ச் மாதத்தின் இரண்டாவது பகுதியில் நாட்டின் பல இடங்களில் பகல் நேர வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது.

மின்வெட்டு வராது
இந்த வெயில் தாக்கம் அதிகரித்துள்ள தால் மின்சார பயன்பாடும் அதிக ரித்துள்ளது. தமிழகத்தின் உச்சபட்ச தேவை 14ஆயிரம் மெகாவாட் என்பது மாறி, சில தினங்களுக்கு முன்பு 16 ஆயிரத்து 481 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டின் உச்சபட்ச அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மின்சார தேவை மேலும் அதிக ரிக்கக்கூடும் என்பதால் மின்வாரியம் பல் வேறு வழிகளில் மின் உற்பத்தியை அதிக ரிக்க திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் 17,500 மெகாவாட் அளவு க்கு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் நிலை ஏற்பட்டாலும், அதனை சமாளிக்க நடவ டிக்கைகளை எடுத்து வருவதாக அதிகா ரிகள் தெரிவிக்கின்றனர்.

;