சேலம் சேந்தமங்கலம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு நியாயம் கேட்டும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ஆர்.ஜெயச்சந்திரன், மாவட்டச் செயலாளர் கி.ராதை, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.நடராஜன், ஆர்.செல்வகுமாரி, ராஜூ, முரளி, பிரேமா, குருமூர்த்தி, சாரதி, பாப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.