districts

img

பெண்கள் பெயரில் பட்டா கேட்டு பெத்தேல் நகர் மக்கள் மனித சங்கிலி

சென்னை, மார்ச் 8 –  பெண்கள் பெயரில் குடி மனைப் பட்டா வழங்ககோரி செவ்வாயன்று (மார்ச் 8)  கிழக்கு கடற்கரை சாலையில்  பெத்தேல் நகர் மக்கள் மனித சங்கிலி நடத்தினர், பெத்தேல் நகரில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு தலா  2 சென்ட் நிலம் வழங்க  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கெஜ லட்சுமி பரிந்துரைத்தி ருந்தார். ஆனால்  குடி யிருப்புகள் அமைந்துள்ள பகுதி மேய்க்கால் புறம் போக்கு  என கூறி குடியி ருப்புகளை அகற்ற சென்னை நீதிமன்றம் உத்தர விட்டது.   சமீபத்தில்   நிகழ்ச்சி  ஒன்றில்  பேசிய வீட்டு வசதித்  துறை அமைச்சர் முத்துசாமி பெத்தேல்நகர் மக்களை அகற்றும் எண்ணம்  இல்லை என்று தெரிவித் துள்ளார். இந்நிலையில் பெத்தேல் நகர் வழக்கு தொட ர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு விரைவில் வெளி வர உள்ளது. இதற்கிடையே, பெத்தேல் நகரை நில வகை  மாற்றம் செய்து குடி மனைப் பட்டா வழங்க கோரி,  சர்வதேச மகளிர் தினத்தில்  அப்பகுதி பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை  சார்பில் நடை பெற்ற இந்தப் போராட் டத்தில், முன்னாள் முதல மைச்சர் கருணாநிதி அறி வித்தபடி, பெண்கள் பெய ரில் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், ஆட்சியர் கெஜலட்சமி பரிந் துரைத்தப்படி பட்டா வழங்க  வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

;