districts

img

கண் மருத்துவ சங்கத் தலைவராக டாக்டர் நிர்மல் பொறுப்பேற்பு

சென்னை, ஆக. 8-

     தமிழ்நாடு கண் மருத்துவக் கழகத்தின் (டிஎன்ஒஏ)  தலைவராக  டாக்டர் டி நிர்மல் ஃபிரெட்ரிக்  தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய கண் மருத்துவ சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு  கண் மருத்து வர்களின் சங்கம் மற்றும் எழுபது  ஆண்டுகால வளமான பாரம்பரியத்து டன், டாக்டர் டி நிர்மல் ஃபிரெட்ரிக்கின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க  உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான அரசு கண் மருத்துவ மனைகள் போன்ற நிறுவனங்களால் செழுமைப்படுத்தப் பட்ட மாநிலத்தின் பாரம்பரியம், கண் பராமரிப்பு  முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை வழங்கி யுள்ளது என்று  டாக்டர். ஃப்ரெட்ரிக் கூறினார்.  மாநிலம்  முழுவதும் கண் பராமரிப்பு தரத்தை உயர்த்தவும் கண்  பராமரிப்பு நிபுணர்களுக்கு தொடர்ச்சியான கல்வி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

   மேலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நீரிழிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.