districts

img

பணிமாறுதலில் பாராட்டு நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பெத்திக்குப்பம் ஊராட்சியில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊராட்சி செயலர் பி.என்.செல்வம் பணிமாறுதலில் செல்கிறார்.இவரின் பணி பாராட்டியும், வழியனுப்பும் நிகழ்ச்சி வெள்ளியன்று (மார்ச் 31), ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம், துணைத் தலைவர் எஸ்.குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் இ.சங்கர், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ப.லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.