districts

img

போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரிக்கை

கள்ளக்குறிச்சி, மே 3- உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் ஆதி திராவிட நலத்துறை சார்பில் வருங்கால சந்ததியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிரா மத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 108 நபருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டது. இதில் மீதமுள்ள 40 சென்ட் நிலம் வருங்கால சந்ததியினருக்கு ஒதுக்கப்பட்டது.  இதனி டையே இந்த இடத்தை அந்த கிராமத்தை சேராத நபர்களுக்கு போலி யான ஆவணங்கள் மூலம் ஒப்பனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே அதே கிராமத்தில் வசித்து வரும் வீட்டுமனை இல்லாதநபர்களுக்கு வழங்கக் கோரியம் போலி யான நபர்களுக்கு வழங்கப் பட்ட பட்டாவை ரத்து செய்து விட்டு கிராமத்தை சேர்ந்த வர்களுக்கு பட்டா வழங்க கோரியும் என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில் சிபிஎம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார், விசிக ஒன்றிய செயலாளர் இளங்கோவன்,நாச்சியார் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தானம் சக்திவேல்,குரும்பூர் ஒன்றிய கவுன்சிலர் ஏழு மலை ஆகியோர் கலந்து கொண்ட னர்.

;