districts

img

பவானி நகரில் சமூக விரோதிகள் நடமாட்டம்

சென்னை, செப்.8 - வேளச்சேரி பவானி நகரில் சமூக விரோதி களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி தலைவர் ஏ.செல்வி, செயலாளர் பி.சித்ரகலா, பொரு ளாளர் கே.பாரதி ராணி உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் வழங்கப்பட்ட வேளச்சேரி, பவானிநகரில் 500 குடியிருப்புகள் உள்ளன. அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதி களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிக மாக உள்ளது. கஞ்சா, மது, போதை ஊசி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் சாலை, தெருக்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடுகின்றனர். பகல் நேரங்களில் கையில் ஆயுதங்களோடு நடமாடுகின்றனர். குடியிருப்பு பகுதியில் சமீப காலமாக தொடர் கொலைகள் நடக்கின்றன. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பிள்ளை கள் பள்ளிக்கு, வேலைக்கு செல்லத் தயங்கு கின்றனர்; மன ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இளம் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். தெருக்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்  களையும் சமூக விரோதிகள் உடைத்து விட்டனர். எனவே, குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து, தினமும் ஒரு காவலர் ரோந்து பணியில் தவறாமல் ஈடுபட உத்தரவிட வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.