இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வரும் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வில்லிவாக்கம் பகுதி, ஐசிஎப் சில்வர் ஜூப்ளி பள்ளி தலைமை ஆசிரியை ஆர். காஞ்சனா மாலா கையெழுத்திட்டார். அப்போது மாணவர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகத்தை வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். இந்நிகழ்வில் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோ.விக்னேஷ், பகுதி தலைவர் யூஜின், பொருளாளர் டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.