சென்னை, ஜன. 19- சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் கட்டப்பட்ட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி யன்று (ஜன. 19) அடிக்கல் நாட்டினார். சென்னையின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று அண்ணா சாலை. இந்த சாலையில் திருவல் லிக்கேணி முதல் கிண்டி வரையிலான பல்வேறு முக்கிய சாலைகள் இணை கிறது. வாகனங்களின் பயன் பாடு, நகரமயமாக்கல் மற்றும் தொழில் துறை களின் வளர்ச்சி ஆகிய வற்றின் காரணமாக சிஐடி நகர், நந்தனம், செனடாப் சாலை, எல்டாம் சாலை சந்திப்புகளில் 3 கி.மீ. தொலைவில் சிக்னல்களை கடந்து செல்வதற்கு சுமார் 16 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. மேலும் இந்த சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வாகன அடர்த்தியை தாண்டி தற்போது 10 ஆயிரத்தி லிருந்து 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எனவே இந்த சாலையை கூடுதல் வாகனங்களை தாங்கும் அளவிற்கு உயர்த்த வேண் டிய கட்டாயம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இந்நிலையில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் ஆகியவற்றுடன் கூடு தல் திறன்மிக்க போக்கு வரத்து திட்டத்தை உருவாக் கும் நோக்கில், அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்தாண்டு நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கையில் சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். இதையடுத்து தேனாம் பேட்டையிலிருந்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு,
சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ. தொலை விற்கு 4 வழி உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அண்ணா சாலையின் கீழே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை செல்வதால் இந்த உயர்மட்ட சாலையில் இருந்து வரும் அழுத்தம் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள், இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருடன் கலந்தா லோசிக்கப்பட்டு இந்த உயர்மட்ட சாலை வடிவ மைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரு புறத்திலும் இரும்பினாலான உபகரணங்களை கொண் டும், மண்ணின் தாங்கும் திறனை நவீன தொழில் நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா சாலையில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பணி களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி யன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த பணியை 24 மாத காலத் திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.