திருவண்ணாமலை,மே 7- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிடம், வேளாண் அலுவ லர்கள் முறைகேடாக பெற்ற தொகை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலையீட்டால் திரும்ப வழங்கப் பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ளது மணல்வாடி கிராமம். அங்கு அன்பழகன் என்ற விவசாயி, அருகில் உள்ள சீசமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்றார். நெல் கொள்முதல் செய்த அலுவலர்கள் விவ சாயிடம் முறைகேடாக ரூ.6600 பெற்ற னர். முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப விவசாயி வசம் வழங்க வேண்டும், முறைகேடு செய்த பணி யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்ட குழுவின் சார்பில், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரிடம், திங்கள் மாலை புகார் மனு அளிக்கப்பட்டது. விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி. கே. வெங்கடேசன், மாவட்ட செய லாளர் அ. உதயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் அண்ணாமலை, செய்யார் ஒன்றிய நிர்வாகிகள் ஜெயக்குமார், தேவராஜன், அலங்கார மங்கலம் சாமிக்கண்ணு, கார்குணம் சின்னப்பையன், சக்திவேல் உள்ளிட்டோர் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மண்டல மேலாளர் உரிய நடவடிக்கை மேற்கொண்டார். அதைதொடர்ந்து, விவசாயிடம் முறைகேடாக பெற்ற 6600ரூபாயை சில மணித்துளி களில், நெல்கொள்முதல் செய்த பணி யாளர்கள் விவசாயின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப கொடுத்தனர். மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி காரணமாக பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு, கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரும்பாடுபட்டு பல ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்த நெற்பயிர் காய்ந்து விட்டதால் நெற்பயிரை மாடு விட்டு மேய்க்கும் அவலம் ஒருபுறம் நடந்து வருகிறது. வாங்கிய கடனை திரும்பக் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம் அரசு பணியாளர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.