districts

img

தனியார் நிலங்களில் வசிப்போரிடமும் சொத்து வரி வசூலிக்க வேண்டும் சென்னை மாநகராட்சி மேயரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 18 – தனியார் நிலங்களில் வசிப்போரி டம் மாநகராட்சி சொத்து வரி வசூ லிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேடு பள்ளமாக இருந்த நிலங்களை செம்மைப்படுத்தி குடிசை அமைத்து மக்கள் வசித்து வந்தனர். நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, சென்னை யில் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அத்தகைய நிலங்களில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டி மக்களுக்கு வழங்கப்பட்டது.  அவ்வாறு, பல தனியார் நிலங்க ளில் குடியிருந்த பகுதிகளை அரசு மேம்படுத்த முடிவு செய்தது. அத்தகைய இடங்களில் தனியார் நிலங்கள் மற்றும் அனாமதேய நிலங்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் காரணமாக மக்களுக்கு அரசால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடிய வில்லை. இதனால் மக்கள் குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற முடியாமல், அடிப்படை வசதிகளின்றி அவதிப் பட்டு வந்தனர்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர மேயராக இருந்த போது, 100 ரூபாய் செலுத்தி குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற்றுக்கொள்ள ஆணையிட்டார். இதனால் தனியார் நிலங்களில் இருந்த மக்கள் பெரு மளவு பயனடைந்தனர். இதனை தொடர்ந்து பட்டா, மின் இணைப்பு கேட்ட மக்களுக்கு அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர்.  

சொத்துவரி செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். இந்த நிலையில், கடந்த 2ந் தேதி நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தனியார் நிலங்களில் குடியிருப்போரிடம் சொத்துவரி வசூலிக்க கூடாது என்று சில உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சே பனை தெரிவித்தது.  இதுதொடர்பாக வெள்ளியன்று (மார்ச் 17) மேயர் ஆர்.பிரியாவிடம், சிபிஎம் 123வது வார்டு கவுன்சிலர் எம்.சரஸ்வதி தலைமையில், தி.நகர் பகுதிகுழு உறுப்பினர் எம்.குமார், 133 வது வட்ட கிளைச் செயலாளர் என்.வேலாயுதம் மற்றும் டி ரவி ஆகி யோர் மனு ஒன்றை அளித்தனர். அதில், “தனியார் நிலங்களில் நீண்ட காலமாக வசிப்போரிடம் சொத்து வரி வசூலிக்க கூடாது என மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றினால், பல்லா யிரக் கணக்கில் குடியிருக்கும் மக்கள் நிராதரவாகவும், பாதுகாப்பற்ற வர்களாகவும் மாறும் சூழல் ஏற்படும். நில மோசடிக்காரர்கள் போலி ஆவ ணங்களை தயாரித்து மக்களை வெளியேற்ற முயற்சிப்பார்கள்.  எனவே, மு.க.ஸ்டாலின், 100 ரூபாய்க்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறும் திட்டத்தை கொண்டு வந்தது போன்று சிறப்பு திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும். அதன்படி சொத்து வரி வசூலித்து, மின் இணைப்பு, பட்டா பெற ஆவண செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

;