திருவள்ளூர், பிப்.8- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அத்துமீறல் மற்றும் மாநில உரிமை, கூட்டாட்சி கோட் பாடுகளுக்கு எதிராக செயல் படும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து வியாழ னன்று (பிப் -8), திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கோபால் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநில கட்டுப்பாடு குழு தலைவர் ப.சுந்தரராசன், திமுக தலைமை செயற்குழு உறுப் பினரும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், திமுக மேற்கு மாவட்ட செயலாள ரும் திருத்தணி சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு, விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத், திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செலவம், ஜி.சம்பத், ஆர்.தமிழ் அரசு, சி.பெருமாள், இ.மோகனா, இடைகமிட்டி செயலாளர்கள் ஏ.ஜி. கண்ணன் (ஊத்துக் கோட்டை), ஜெ.ராபட் எபிநேசர் (பூந்தமல்லி), வி.அந்தோணி (திருத்தணி), ஏ.சிவபிரசாத் (ஆர்.கே.பேட்டை- பள்ளிப்பட்டு), உட்பட பலர் கலந்து கொண் டனர்.