districts

img

பாஜக அரசை கண்டித்து செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்த கல்லூரி நிர்வாகத்தையும், அதற்கு ஆதரவாக செயல்படும் மாநில பாஜக அரசை கண்டித்து செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டத் தலைவர் கே.அமலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராமமூர்த்தி, மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கீதா, வட்டச் செயலாளர் ஆர்.பிரியா, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.மாதவன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் எஸ்.சையத் உஸ்மான் ஆகியோர் பேசினர்.