கிருஷ்ணகிரி அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை,சூளகிரி வட்டங்களில் யானைகள் தாக்குதல் சம்பவத்தால் ஓராண்டில் 15 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். எனவே வனச்சரகர்கள் தீவிர கவனம் செலுத்தி உடனுக்குடன் யானைகளை விரட்ட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர்,தளி,கெலமங்கலம் ஒன்றிய குழு செயலாளர்கள் வெங்கடேஷ்,ராஜா உள்ளிட்டஅனைத்து கட்சி தலைவர்கள் தேன்கனிக்கோட்டையில் மறியலில் ஈடுபட்டனர்.அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் வட்டாட்சியர் வனச்சரகர்கள் சுமூக பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.