districts

அடையாறு ஆற்றின் குறுக்கே மெட்ரோ பணி மழை காரணமாக நிறுத்தம்

சென்னை, அக்.10- அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி பருவ மழைக்குப் பிறகு தொடங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4வது வழிப்பாதையில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலை யத்தில் இருந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் செல்வதற்காக  அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு  துளைகள் அமைக்க மண்பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள பூங்காவில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதைதான் அடையாறு ஆற்றின் கீழ்  அதாவது நீருக்கடியில் அமைகிறது. இதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப் பட்ட 2 டணல் போரிங் இயந்திரம் ஈடுப்படுத் தப்பட உள்ளது. அதில் ஒரு டணல் போரிங்  இயந்திரம் தற்போது பணிகள் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றொரு இயந்திரம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் பொருத்தும் பணி ஓரிரு நாட்களில்  தொடங்கப்படும்.   தற்போது பருவமழை வரவுள்ள நிலையில் இப்பணிகள் மழையால்  தடை ஏற்படாத நிலையில்  பருவமழைக்கு பின் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.

;