districts

பரங்கிப்பேட்டையில் சிபிஎம் சாலை மறியல்

சிதம்பரம், பிப். 5- பரங்கிப்பேட்டை பொன்னந்திட்டு பாலத்தின் இணைப்பு சாலைகளின் இரண்டு பக்கமும் புதிய சாலை அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் திங்கட்கிழமை (பிப். 5) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சம்பந்தப் பட்ட பாலத்தின் அருகே கட்சி ஊழியர்கள் திரண்ட னர்.  இதுகுறித்து தக வல் அறிந்த புவனகிரி வட்டாட்சியர், பரங்கிப் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து, இது இரண்டு வட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட காரணத்தினால் சார் ஆட்சியர் தலைமையில் இரண்டு வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நெடுஞ் சாலைத் துறை அதிகாரி கள், காவல்துறை உயரதி காரிகள் வைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.  இதையடுத்து போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தலை வர்கள் தெரிவித்தனர். இதில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, பரங்கிப்பேட்டை மண்டல பொறுப்பாளர் அசன் முகமது மன்சூர், ஒன்றியச் செயலாளர் ஏ.விஜய், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய சீலன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கொளஞ்சி யப்பன், தனசேகர், பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோ. அருள் முருகன், ஹர்ஷாத் மெகராஜ், சிறுபான்மை மக்கள் நல குழு நி்ர்வாகி கள் அபிபுல்லா முகமது தாஹா, ஜெய்னுல், கட லோர வாழ்வுரிமை இயக்க நிர்வாகிகள் சந்தானராஜ் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.