districts

img

மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறந்திடுக

புதுச்சேரி,பிப்.19- மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.  புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ரேசன் கடைகள் மூடி வைக்கப் பட்டுள்ளது. நாட்டிலேயே ரேசன் கடை இல்லாத ஒரே மாநிலமாக புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்களின் உணவு பாது காப்பு  என்பதும் கேள்வி குறியாக்கப் பட்டுள்ளது. அண்டை மாநிலமான தமிழகம்,கேரளாவில் ரேசன் கடை யில் மக்களுக்கு மானிய விலை யில் அரிசியும், பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் நாள்தோறும்  வழங்கப் படுவது போல் புதுச்சேரியிலும் ரேசன்கடைகளை திறந்து அத்தியா வசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  பல கட்ட போராட்டம் நடைபெற்றது. எனவே விலைவாசி உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க உடனடியாக ரேசன் கடைகளை திறக்க கோரி மார்க்சி ஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி  சார்பில் இந்த போராட்டம் நடைபெற்று வரு கிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை முன்பு திங்களன்று (பிப்.19) துவங்கிய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி உழவர் கரை நகர கமிட்டி செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினார். சிபிஎம் புதுச்சேரி  மூத்த தலைவர் சுதா சுந்தரராமன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில செய லாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், பிரபுராஜ், கொளஞ்சி யப்பன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள் மதிவாணன்,அன்புமணி, ராம மூர்த்தி, சரவணன் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக காத்திருப்பு போராட்டத்தை யொட்டி  நிகழ்விடத்தில் உணவு சமைத்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து இப்போராட்டம் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.