திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா ஆலப்புத்தூர் பஞ்சாய த்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் மூன்று மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ, மாணவிகள் ஓடு வேய்ந்த கூரையின் கீழ், கல்வி பயிலும் சுழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக புதிய பள்ளி கட்டிடத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.