districts

செய்யாறில் செயல்வீரர்கள் கூட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 31- 18 வது மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை வெற்றி பெறச் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் செய்யாறு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமலல்லூர் சேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ. ஜோதி, ஆரணி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் பேசினர். ஆரணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சி.அப்பாசாமி, செய்யாறு  பொறுப்பாளர் டி.வெங்கடேசன், வந்தவாசி  பொறுப்பாளர்‌ அப்துல் காதர், போளூர்  பொறுப்பாளர் எம்.சிவாஜி, சேத்துப்பட்டு இடைக்குழு சார்பில் கோ. அண்ணாமலை ஆகியோர்‌ பேசினர்.