90 ஏக்கர் நிலம் மீண்டும் குத்தகை
சென்னை, பிப்.22- சென்னையை அடுத்த பையனூரில் உள்ள 90 ஏக்கர் நிலத்தை திரைத்துறையினருக்கு மீண்டும் குத்தகைக்கு விடும் வகையிலான அர சாணையை, திரைப்படச் சங்கத்தினரிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய அந்த 90 ஏக்கர் இடத்தின் இன்றைய மதிப்பு ரூ.180 கோடியாகும்.
என்ஐஏ விசாரணை
சென்னை,பிப்.22- ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத் தோடு தொடர்புடைய அல்பாசித்தை 7 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மயி லாடுதுறையை சேர்ந்த அல்பாசித்தை கடந்த ஜன.8 அன்று புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ கைது செய்தி ருந்தது. தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சதி திட்டம் ஏதேனும் தீட்டப்பட்டதா? என அல்பாசித்திடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
உயர்நீதிமன்றம் யோசனை
சென்னை, பிப்.22- ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடை யாக இருக்கும் விதிகளை தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி யாக புழல் சிறையில் உள்ள ராஜ்குமார் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த யோசனை தெரி விக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை,பிப்.22- சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, சிதம்ப ரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது நல்ல உத்தரவு. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் இறைவனின் முன்பு அனைவருக்கும் சமம் என்ற வார்த் தைக்கு உயிர் கிடைத்திருக்கிறது. சிதம்ப ரம் நடராஜர் கோவில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வது புதிய நடைமுறை அல்ல, ஏற்கெனவே காலகால மாக இருந்த வந்து நடைமுறை தான். இடை யில் கொரோனாவின் போது கனகசபை தரி சனத்தை தடை செய்தார்கள். அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்குப் பிறகு பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதை எதிர்த்து தீட்சதர்கள் நீதிமன்றத்தை அணுகினாலும், கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதன்படி கனக சபை மீது ஏறி தரி சனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற தீட்சதர் தொடர்ந்த வழக்கில் தான் நீதியரசர்கள் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கருத்தை கேட்டி ருக்கிறார்கள். மாறாக தரிசனத்திற்கு தடை விதிக்கவில்லை. தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் எப்படி தரிசனம் செய்யலாம் என்பது குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த சட்ட போராட்டம் இன்று நேற்று அல்ல 2000 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டி ருக்க கூடிய போராட்டம் என்றார்.
பரந்தூரில் இன்று நில உரிமை பாதுகாப்பு மாநாடு
காஞ்சிபுரம்,பிப்.22- காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் 13 கிராமங்கள், 5746.18 ஏக்கர் நிலம் எடுக்க 31.10.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலம் எடுக்கும் பணிகள் அரசு அதிகாரிகள் மூலம் நடைபெற்று வரு கிறது. இந்த திட்டத்தின் மூலம் 1005 வீடுகள், 22 ஏரிகள், குளம். குட்டை, பள்ளிக்கூடம், சுடுகாடு, ஆரம்ப சுகாதார நிலை யம், நீர்வரத்து கால்வாய்கள், மூன்று போகம் விளையும் நஞ்சை நிலம் முழுமையாக அழிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பிறந்த மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்று அப்பகுதி மக்களின் போராட்டம் 800 நாட்களை கடந்து விட்டது. போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ் வாதார பாதுகாப்பு குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பரந்தூர் வட்டார விவசாயிகள் நில உரிமை பாதுகாப்பு மாநாடு பிப்.23 காஞ்சிபுரம் ஏகேஜி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் கே.நேரு தலைமையில் நடைபெறு கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பி.சண்முகம், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், நீரியல் நிபுணர் ஜனகராஜன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பி.டில்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட வளர்ச்சிக்கான மேற்பார்வை குழு கூட்டம்
திருவண்ணாமலை, பிப்.22- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற் பார்வை குழு கூட்டம் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பி னர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர், உறுப்பினர் செயலாளர் க.தர்ப்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத் தில் திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவ ணன் (கலசப்பாக்கம்), ஓ.ஜோதி (செய்யாறு) மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை,பிப்.22- சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, சிதம்ப ரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது நல்ல உத்தரவு. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் இறைவனின் முன்பு அனைவருக்கும் சமம் என்ற வார்த் தைக்கு உயிர் கிடைத்திருக்கிறது. சிதம்ப ரம் நடராஜர் கோவில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வது புதிய நடைமுறை அல்ல, ஏற்கெனவே காலகால மாக இருந்த வந்து நடைமுறை தான். இடை யில் கொரோனாவின் போது கனகசபை தரி சனத்தை தடை செய்தார்கள். அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்குப் பிறகு பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதை எதிர்த்து தீட்சதர்கள் நீதிமன்றத்தை அணுகினாலும், கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதன்படி கனக சபை மீது ஏறி தரி சனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற தீட்சதர் தொடர்ந்த வழக்கில் தான் நீதியரசர்கள் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கருத்தை கேட்டி ருக்கிறார்கள். மாறாக தரிசனத்திற்கு தடை விதிக்கவில்லை. தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் எப்படி தரிசனம் செய்யலாம் என்பது குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த சட்ட போராட்டம் இன்று நேற்று அல்ல 2000 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டி ருக்க கூடிய போராட்டம் என்றார்.
முதல்வரின் 10 அறிவிப்பு: சிபிஎம் வரவேற்பு
கடலூர்,பிப்.22 - கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக வெளியிட்ட 10 அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரவேற்றுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு: சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி வட்டத்தில் பாசன ஏரியான வீராணம் ஏரியை தூர் வாருவதற்கு ரூ.63 கோடி ஒதுக்கீடு. திட்டக்குடியில் உள்ள வெலிங்டன் ஏரியின் கரைகளை பாசன வாய்க்கால்களை தூர்வார ரூ. 130 கோடி ஒதுக்கீடு. சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வந்தால் கடலூர் மாநகரத்தை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க பெண்ணையாற்று கரைகளை பலப்படுத்த ரூ. 57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதேபோல், பண்ருட்டியில் அரசு சார்பில் அறிவியல் மற்றும் கலை கல்லூரி தொடங்குவதற்கு ரூ.15 கோடி. எம்.புதூர்- திருவந்திபுரம் சாலை மேம்பாட்டு பணிக்கு ரூ. 7 கோடி. பி.முட்லூர் - சேத்தியாதோப்பு இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.50 கோடி. கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தை சீர்படுத்த ரூ. 35 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று, தியாகி ராஜேந்திரன் நினைவிடம் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். கடலூர் மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைக்காக பத்து திட்டங்களை அறிவித்து அதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்க செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட மக்கள் சார்பில் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு மாதவன் தெரிவித்திருக்கிறார்.
மாவட்ட மின்சார குழு கூட்டம்
திருவண்ணாமலை,பிப்.22- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட மின்சார குழு கூட்டம் மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணா துரை தலைமையில் நடை பெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சா ண்டி, மாவட்ட ஆட்சியர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவ ணன் (கலசப்பாக்கம்), ஓ.ஜோதி(செய்யாறு) மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளச்சாராயம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி,பிப்.22 - கள்ளக்குறிச்சி மாவட் டம், சங்கராபுரம் வட்டத்தி லுள்ள காரங்காடு கிராமத் தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஏழு மலை தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது ஜான்சன் என்பவர் தனது விவசாய நிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. பிறகு, இதைய டுத்து, கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், ஜான் சனை கைது செய்து விசா ரணை நடத்தினர். விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியான போதும், கள்ளச் சாராய விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.