districts

9 ஆலைகளுக்கு ரூ.9 கோடி அபராதம்

சென்னை, ஜூலை 22-

    மணலி பகுதியில் இயங்கி வரும் 9 தொழிற்சாலைகள் அதிக அளவில் மாசை வெளிப்படுத்துவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தென் பிராந்தியத்திற்கான கிளை கண்டறிந்துள்ளது. அதனடிப்படையில் கடந்த 2019 ஏப்ரல் முதல் 2020 டிசம்பர் வரையான காலத்திற்கு இந்த தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சிபிசிஎல் சுத்திகரிப்பு நிலையம் 1 மற்றும் 2க்கு ரூ1.5கோடியும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் 3க்கு ரூ1.8கோடியும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பிராப்பிலின் பிளான்டுக்கு ரூ.72.45லட்சம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டிஎச்டிஎஸ் பிளான்டுக்கு ரூ54.45லட்சம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரெசிட்அப்கரடேசன் பிளான்டுக்கு ரூ1.58 கோடி , சென்னை வட அனல்மின் நிலை யத்திற்கு ரூ1.23 கோடி, தேசிய அனல் மின்சார கழகத்திற்கு ரூ.55.8லட்சம், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆலைக்கு ரூ.45ஆயிரம், டிஎன்பிபிஎல் பிளாண்டுக்கு ரூ1.26 கோடி. தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்ததுடன், தொழிற்சாலை கள் வெளியேற்றும் மாசு தொடர்பான நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வல்லுநர்கள் குழுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.