districts

img

630 மி.கி. தங்கத்தில் கருணாநிதி உருவம்

சிதம்பரம், ஜூன் 2- சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகை செய்யும் தொழில் செய்து வருபவர் முத்துக்குமரன் (41). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளையொட்டி மொத்தம் 729 மில்லி தங்கத்தில் 3 சென்டி மீட்டர் உயரம், 3 சென்டி மீட்டர் அகலத்தில் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்துள்ளார். இதில் 630 மில்லி தங்கத்தில் கருணாநிதியின் உருவத்தையும், 99 மில்லி தங்கத்தில் கலைஞர் என்ற கருப்பு சிவப்பு நிற எழுத்தில் பெயரையும் பொறித்துள்ளார். இவர் ஏற்கனவே குறைந்த அளவு தங்கத்தில் இந்திய நாடாளுமன்றம், தமிழக சட்டசபை, நடராஜர் கோவில், தாஜ்மஹால் உள்ளிட்ட பலவற்றை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.