கடலூர்,டிச,16- மங்களூர் வட்டாரத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப் பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லூர் வட்டத்திற்குட்பட்ட சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி விவசாயிகள் மக்காச்சோளம் பயி ரிட்டிருந்தனர். பருவ மழை தவறியதால், மழை யின் அளவு குறைந்தா லும் மக்காச்சோள கதிர்கள் வந்து, அதில் மணி பிடிக்காமல்போனது. அதையும் மீறி, சில இடங்க ளில் நன்றாக முளைத்த பயிர்கள் படைப்புழுவின் தாக்குதலால் முற்றிலும் அழிந்தன. வானம் பார்த்த பூமி யான மானாவாரி விவசாய நிலங்களில், கடன் வாங்கி பயிரிட்ட சோளப் பயிர்கள் அழிந்து போனதால் இப்பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்த னர். பாதிக்கப்பட்ட பயி ர்களை அரசு தரப்பில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் சி.வெ. கணேசன் நவ. 1 ஆம் தேதியன்று, பாதிப்படைந்த மக்காச்சோள வயல்களை பார்வையிட்டு, விவசாயி களிடம் பயிர் பாதிப்பு குறித்து விரிவாக கேட்ட றிந்தார். அப்போது, வேளாண் அதிகாரிகள் பாதிப்பின் தன்மையை எடுத்துரைத்தனர். “மக்காச்சோள பயிர் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வேளாண் உயர்மட்டக் குழுவினர், பாதிக்கப்பட்ட மங்களூர், நல்லூர் வட்டாரங்களில் பயிர் பாதிப்பை நேரடியாக ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு விரைவில் கிடைக்கும் என விவசாயிகள் நம்பியி ருந்த நிலையில், சென்னை யில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளம் காரணமாக, மொத்த அரசு நிர்வாகமும் அதற்கான மீட்பு பணி களில் கடந்த 10 நாட்க ளாக ஈடுபட்டுள்ளது. இத னால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் கிடைக்குமா? - கிடைக்காதா? என்ற அச்சத்தில் உள்ளனர். “ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நகையை அடகு வைத்தும், கூட்டு றவு வங்கியில் பயிர் கடன் பெற்றும் பயிரிட்டோம். பயிர்க் கடனை அடைப்ப தற்கு வழி தெரியாமல், அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் தவிக்கி றோம். விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு குடும்பத்தின் நடப்புச் செலவை மேற்கொள்வோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். “பயிர் பாதிப்பு குறித்து முறையாக கணக்கிட்டு, சென்னைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் உரிய நிவார ணம் வழங்கப்படும். காப்பீடு செய்தவர்களுக்கு அதற்கான தகுதியான இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ற னர்.