சென்னை ஆர்.கே.நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் தோழர் சந்திரன் இலவச கல்வி நிலையத்தின் 5ஆம் ஆண்டு விழா கிளைச் செயலாளர் பாஷா தலைமையில் ஞாயிறன்று (ஜன. 22) நடைபெற்றது. இதில் 41ஆவது வார்டு மன்ற உறுப்பினர் பா.விமலா. 39ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதி செயலாளர் ரவிக்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் ஆர்.nஜயச்சந்திரன், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் விஜய், மாவட்டக் குழு உறுப்பினர் விஜயகுமார், எம்.வி.கிருஷ்ணன். தோழர் சந்திரனின் மகன்கள் சரவணன். பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.