பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 50வது நினைவு நாள் இன்று (டிச.24)அனுசரிக்கப்படுகிறது, இதைமுன்னிட்டு வேப்பேரி பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகம், திமுக,. இடதுசாரிக்கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. பெரியார் நினைவுநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.