காஞ்சிபுரம், ஆக,11
தலித் இளைஞர்களை 40 க்கும் மேற்பட்ட நபர்களின் காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடை பெற்றுள்ளது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செய லாளர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் மனு அளித்துள்ளார். அதில் காஞ்சி புரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம். ஆசூர் கிராமத்தை சேர்ந்த தலித் இளை ஞர்களான விஷால், சுந்தர் என்ற இரண்டு நபர்களையும் ஆக.5 அன்று மாலை அவளூர் கிராமத்தை சேர்ந்த சாதி ஆதிக்க சக்திகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கடுமை யாக தாக்கினர். சுந்தரை இழுத்துச்சென்று அருகில் உள்ள பாலாற்றில் வைத்து 40க்கும் மேற்பட்ட நபர்களின் காலில் தனித்தனியாக விழவைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காட்டு மிராண்டித்தனமான செயலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காஞ்சிபுரம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. முருகவேல் என்பவரது தலைமையில் ஊராட்சி தலைவரும். துணைத் தலைவரும். பள்ளி ஆசிரியர் மோகன்தாஸ் என்பவரும் தாக்குதலை தலைமையேற்று நடத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் ஜனநாயக அமைப்புகளை இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆசூர் மற்றும் அவளூர் கிராமத்தில் சாதிய மோதல் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் துறை உரிய முன்னெச்ரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக பாதிக்கப்பட்ட தலித் இளை ஞர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சி. சங்கர் காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் டி. ஸ்ரீதர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.சிவப்பிரகாசம், எஸ்.சீனிவாசன். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு ஆகி யோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார் கள்.