districts

img

வணிக பயன்பாட்டிற்கான 4 புதிய கனரக டிரக்குகள் சென்னையில் ஐச்சர் நிறுவனம் அறிமுகம்

சென்னை, ஜன. 24- வேகமாக வளர்ந்து வரும் நீண்ட தூர போக்கு வரத்தை கருத்தில் கொண்டு ஐச்சர் டிரக்ஸ் அன்ட் பஸ்சஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவான விஇ வர்த்தக வாகன நிறுவனம், பல்வேறு மாடல்களில் புதிய கனரக டிரக்குகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த புதிய வகை டிரக்கு கள், சக்திவாய்ந்த மற்றும்  எரிபொருள் திறன்மிக்க என்ஜின்களைக் கொண்டுள் ளன. இவை தளவாட போக் குவரத்து உரிமையாளர் களுக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சிறந்த இயக்க நேரத்தை வழங்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும்  தலைமை செயல் அதிகாரி வினோத் அகர்வால் கூறினார். இந்த புதிய மாடல் வாகனங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிக உற்பத்தி மற்றும்  லாபத்தை வழங்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.