districts

img

தொழிற்சங்க முன்னோடி தோழர் வி.பி.சிந்தன் 37ஆவது நினைவு தினம்: சென்னை மாவட்ட சிபிஎம், சிஐடியு தலைவர்கள் அஞ்சலி

தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கை  நட்சத்திரமாக இருந்த தோழர் வி.பி.சிந்தன் 37ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் செயலாளர் வி.தயானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.