செங்கல்பட்டு,ஆக.26-
செங்கல்பட்டு மாவட்டம், தொழில்துறை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில் தொழில் முதலீட்டு கழகத்தின் சென்னை மண்டல மேலா ளர் பழனிவேல், தொழில் முதலீட்டு கழக மறைமலை நகர் கிளை மேலாளர் சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் சிப்காட் திட்ட அலுவலர் நளினி குறு சிறு தொழில் முதலீட்டு அசோசியேஷன் செயலா ளர் தனசேகரன், கருங்குழி அரிசி ஆலை செயலாளர் குமார் உள்ளிட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகை ரூ.30 கோடி வழங்கப்பட்டது.