திரைப்பட இயக்குநரிடம் 3 லட்சம் மோசடி
சென்னை, ஏப். 5- சென்னை அண்ணாநகரில் திரைப்பட இயக்குநர் தேசிங் பெரிய சாமியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக உதவி இயக்குநரை காவல் துறையினர் தேடுகின்றனர். இயக்குநர் தேசிங்பெரியசாமி யிடம் கடந்த 2018ம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக முகமது இக்பால் என்பவர் இருந்துள்ளார். இவர் தேசிங் பெரிய சாமியின் அனைத்து விதமான வரவு செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளையும் கவனித்து வந்துள்ளார். கடந்த மாதம் தேசிங் பெரியசாமி, தனது 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறு வனத்தில் அடமானம் வைத்து, பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறினாராம். ஆனால், நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து பெற்ற தொகை 3 லட்சம் ரூபாயை தேசிங்கு பெரியசாமியிடம் ஒப்ப டைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரேசன் அரிசி கடத்தியவர் கைது
விழுப்புரம், ஏப்.5- விழுப்புரத்தில் ரேசன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் அருகே அத்தியூர்திருக்கை கிராமத்தில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி 1,400 கிலோ பறி முதல் செய்யப்பட்டது. இதில் குமரேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ரேசன் அரிசி பதுக்கல் வழக்கில், தலை மறைவாக இருந்த, முக்கிய நபரான விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை, வண்டிமேட்டை சேர்ந்த முபாரக்அலி (46) என்ப வரை கடந்த மார்ச் 14ந்தேதி கைது செய்யப்பட்டார். தொடர் குற்றத்தில் ஈடு பட்டதால் முபாரக் அலி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.
டிப்பர் லாரி புகுந்து வீடு தரைமட்டம்
கிருஷ்ணகிரி, ஏப்.5- கிருஷ்ணகிரியில் கட்டுப் பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. சூளகிரி வட்டம், புன்ன கரம் கிராமம் முகப்பில் சாலை ஓரம் கூலி வேலை செய்யும் ராமப்பா தன் சிறிய வீட்டில் குடும்பத்துடன் நீண்ட காலமாக வசித்து வருகிறார். இவ்வழியே தினமும் கணக்கற்ற டிப்பர் லாரிகள் கிரசர்கள், குவாரி களுக்கு சென்று வருகிறது. வியாழனன்று அவ்வழியே சென்ற டிப்பர் லாரிகளில் ஒன்று நிலை தடுமாறி சாலையோரம் உள்ள வீட்டில் புகுந்தது. இதில் அந்த வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து ராமப்பா புகார் அளித்ததன் பேரில் சூளகிரி வட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 1.81 கோடி பறிமுதல்
சென்னை, ஏப். 5- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி பறிமுதல் செய்யப் பட்டது. மக்களவைத் தேர்தலை யொட்டி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் போதிய ஆவண மின்றி கொண்டு செல்லப்ப டும் பணம் பறக்கும் படையி னராலும், காவல்துறையின ராலும் பறிமுதல் செய்யப் படுகிறது. இந்நிலையில் ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் பறக்கும் படை யினர் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் வேனை மறித்து, பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் அந்த வாகனத்தில் இருந்த ரூ.1,81,52,100 பணத்திற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என அம்பத்தூரைச் சேர்ந்த அந்த நிறுவனத் தின் ஊழியர் பா.கிருஷ்ண மூர்த்தி, சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படையினர், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை வருமானவரி துறையினரி டம் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை ஒப்ப டைத்தனர். வருமான வரித் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரு கின்றனர்.