districts

img

பார்கின்சன் நோயாளிகள் 3 பேருக்கு ஆழமான மூளைத் தூண்டுதல் சிகிச்சை

சென்னை, ஏப்.6- பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு ஆழமான மூளைத் தூண்டுதல் (Deep Brain Stimulation - DBS)  அறுவை சிகிச்சையை சென்னை வட பழனியில் உள்ள சிம்ஸ்  மருத்துவமனையில் புகழ்பெற்ற நரம்பியல் நிபு ணர்  டாக்டர் யு. மீனாட்சி சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். இந்த சிகிச்சை 63, 40 மற்றும் 9 வயது கொண்ட நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள் ளது.  இந்த டி.பி.எஸ். சிகிச்சை இதுவரை வெவ் வேறு வயதுடைய 5 நோயாளிகளுக்கு இம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டி ருந்தாலும், இந்த சிகிச்சையை  எல்லா வயதின ருக்கும்  ஏற்றது என்பதை நிரூ பிக்கும் வகையில் மூன்று நோயாளிகளின் சிகிச்சை விவரங்கள் வெளி யிடப்பட்டன.  ஆழமான மூளைத் தூண்டுதல் கருவி பதித்தல் என்பது ஒரு அறுவை சிகிச்சை முறை. உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் சில பகுதிகளைச் செயல் படுத்த சில மின்முனை கள் இதில் பொருத்தப்படு கின்றன.  “பார்கின்சன் நோய் என்பது உடல் இயக்கங்  களைப் பாதித்து குறிப்பிடத்தக்க ஊனத்தை ஏற்படுத்தும் நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வழக்க மான செயல்பாடுகள்  மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த டி.பி.எஸ். முறை பயன்படுகிறது என்று டாக்டர் யு. மீனாட்சிசுந்தரம் குறிப்பிட்டார்.

;