விழுப்புரம்,ஏப்.23- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் தலித் மக்கள் 236 பேருக்கு கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இலவச வீட்டு மனையை இதுவரை அளந்து அத்து கட்டி பட்டா வழங்காததை கண்டித்து விக்கிரவாண்டி ஒன்றிய சிபிஎம் கட்சி சார்பில் வரும் ஏப். 27அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தனர். இந்நிலையில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் தலைமையில் ஏப்.22-ந்தேதி சனிக்கிழமை மாலை விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதில் வட்டாட்சியர் இரண்டு மாத காலத்தில் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார், இதனையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைப்பதாக சிபிஎம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் பி.கலியமூர்த்தி,ஆர்.தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.