districts

மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

சென்னை,ஜூன் 26-  

    சென்னை மெட்ரோ ரயிலில் 23.6.2023 அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

     சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர்.