மத்தூர், ஜூன் 14-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் துறையினர் ஜோதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. காவல் துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
உடனே காவல் துறையினர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் ஊத்தங்கரை நஞ்சகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் 24), மணிகண்டன் (27) என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, ரூ. ரூ.800-யை பறிமுதல் செய்தனர்.