2 கார்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
வானூர்,ஏப்.22- விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் ஞாயிறன்று (ஏப்,22) காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர். இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசிமேட்டில் மீன் வரத்து குறைந்தது
ராயபுரம், ஏப்.21 ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 15-ந்தேதி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை:
கிருஷ்ணகிரி,ஏப்.21- குருபரப்பள்ளியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்பு டைய ஓட்டுநர் தில்லியில் கைது செய்ய ப்பட்டார். கிருஷ்ணகிரி அருகே குருபரப் பள்ளியில் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் 6 ஆம் தேதி மர்ம கும்பலால் உடைக்கப்பட்டு 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து, குருபரப்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிந்து மாவட்ட காவல் துறை மூலம் 6 தனிப்படைகள் அமைத்து குற்ற வாளிகளை தேடிவந்தனர். இப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை செய்ததில் வடமாநிலத்தைச் சோ்ந்த வரகள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் தற்போது ஹைதராபாத் பகுதியில் உலவி கொண்டிருப்பதும் தெரிய வந்தது. அப்பகுதியில் தனி படைகள் மூலம் பலமுறை குற்றவாளிகளை பிடிக்க முயற்சித்தும் தப்பிச் சென்ற னர். இந்நிலையில் தில்லி புகா் பகுதி யில் பதுங்கி இருந்த குற்றவாளியான ஹரியாணா மாநிலம் மேவாத் மாவட்டம், ஜடோலி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான 30 வயது ஜாவித்தை 2 நாட்கள் முன்பு கைது செய்தனர். அந்த நபரை விமானம் மூலம் ஏடிஎம் உடைக்கப்பட்ட குருபரப்பள்ளிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.