மக்களவைத் தேர்தலையொட்டி சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளை (விவிபேட்) அனுப்பும் பணி செவ்வாயன்று (மார்ச் 26) நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நடைபெற்ற இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.