districts

img

ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு

சென்னை, செப். 21 - அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிரவுண்ட் நிலம் புதனன்று (செப்.21) வியாசர்பாடியில் மீட்கப்பட்டது. சென்னை வியாசர்பாடி யில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரவீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்த மான குளம் உள்ளிட்ட 21 கிரவுண்ட் நிலம் பால கிருஷ்ணன் தெருவில் உள்ளது. இதில், 8 கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமித்து வீடு மற்றும் மாட்டுதொழுவம் கட்டி வைத்துள்ளனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் 2018 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து கால அவ காசம் வழங்கியும் மக்கள் வெளியேறவில்லை. இந்நிலையில், அறநிலையத் துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் வட்டாட்சியர் காளியப்பன், செயல் அலுவலர் ஆட்சி சிவபிரகாசம், கோவில் மேலாளர் தன சேகர் உள்ளிட்டோர் கட்டி டங்களை அகற்றி இடத்தை மீட்டனர்.

;