districts

img

குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கண்மாய் தண்ணீர்

சிவகங்கை செப்.10- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிரா வயல் ஊராட்சி மருதங்குடி கிராமத்தில் குடியிருப்பு பகு திகளில் கண்மாய் தண்ணீர் புகுந்துள்ளது.  இந்த குடியிருப்பு அரு கில் புது கண்மாய் உள்ளது. இதற்கு முறையான வடி கால் கிடையாது.புதுக்கண் மாய் அருகில் உள்ள இரண்டு  கண்மாய்கள் ஆக்கிரமிப் பில் உள்ளது. சின்ன சுரண்டை கண்மாயின் கால்வாயும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் புது கண்மாய்க்கு இரண்டு கண்மாய் தண்ணீ ரும் சேர்த்து வருகிறது.புது கண்மாய் தண்ணீரால் குடி யிருப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு அச்சம் ஏற் பட்டுள்ளது.ஏற்கனவே சென்ற ஆண்டு இதேபோல்  குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. கடந்த ஆண்டு உடனடியாக மாவட்ட  நிர்வாகத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டு தேவகோட்டை துணை ஆட்சியர் வந்து ஜேசிபி  இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் அகற்றப்பட்டன. இதற்கு நிரந்தர தீர்வாக கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண் டும் என கோரிக்கை வைக்  கப்பட்டது. ஆனால் அமைக்  கப்படவில்லை.  தற்போது இந்த ஆண்  டும் தண்ணீர் நிரம்பி குடி யிருப்பு பகுதியில் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். உடனடியாக  தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகி யோர் மாவட்ட ஆட்சிய ருக்கு மனு அனுப்பியுள்ள னர்.

;