districts

img

மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்திடுக!

அரியலூர், டிச.28 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட  ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை வகித்தார்.  முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா கேட்டு மனு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொது மக்கள் மனு அளித்தனர்.  இக்கூட்டத்தில், அசாவீரன் குடிக்காடு  வட்டார டயர் மாட்டு வண்டி உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிலுப்பனூர் வெள்ளாற்றில்  கடந்த மார்ச் மாதம் வரை மணல் குவாரி  செயல்பட்டு வந்தது. ‌கொரோனா தொற்று ஊர டங்கு காரணமாக சுமார் எட்டு மாதங்களாக குவாரி செயல்படவில்லை. இந்த மணல் குவா ரியை நம்பி சுமார் 1500 மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனர். குவாரி மூடப்பட்டதால் இவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. மாட்டுவண்டியில் பயன்படுத்தப்படும் மாட்டிற்கு கூட தீவனங்கள் வாங்கமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். வருமானம் இன்றி குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட ஆட்சியர் மணல் குவாரி  அமைக்க நடவடிக்கை எடுத்து மாட்டுவண்டி  மணல் தொழிலாளர்கள் குடும்பத்தையும் மாட்டையும் காக்குமாறு மனு அளித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.