districts

img

மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் நீட்டை ரத்து செய் மாணவர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப்.15- தமிழக மாணவர்களை தற்கொ லைக்கு தள்ளும் நீட்டை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் மாணவர், வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வினால் ஏற்பட்ட மன ஊளைச்சலால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவரும், அரிய லூரைச் சேர்ந்த கனிமொழி மற்றும் வேலூரைச் சேர்ந்த சௌந்தர்யா ஆகிய இரு மாணவிகள் என அடுத்தடுத்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். இவ்வாறு மாணவர்களை தற்கொலைக்குத் தள்ளும் நீட் தேர்வை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஈரோடு சூரம் பட்டி நால்ரோடு பகுதியில் செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நவீன் தலைமை தாங்கினார். மாணவர் சங்க மாநில செயலாளர் வீ.மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சசி, மாவட்டத் தலைவர் வி.ஏ. விஸ்வநாதன், கொடுமுடி தாலுகா செய லாளர் லோகநாதன் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.

;