districts

img

தண்ணீருக்காக எழும் 3 ஆம் உலகப்போர்

உதகை, மார்ச் 24- 3 ஆம் உலகப்போர் என்று  எழுந்தால், அது தண்ணீருக் காவே இருக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தை  முன்னிட்டு, நீலகிரி மாவட் டம், கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்புக்குழு மற்றும் கி ஸ்டோன் அமைப்பு  சார்பில், தனியார் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயராமன் தலைமை வகித்தார். கீழ்கோத்தகிரி வனச்சரகர் ராம்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற ஒருங்கி ணைப்பாளர் ஸ்வேதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். லாங் வுட் சோலை பாது காப்புக்குழு செயலர் கே.ஜே.ராஜூ பேசுகையில், இந்த  ஆண்டின் தண்ணீர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை “அமை திக்கான நீர்” என்ற தலைப்பினை கருப்பொருளாக கொடுத் துள்ளது. இன்று உலகில் 100 லிட்டர் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொண்டால் நமது பயன்பாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு வெறும் ஐந்து சொட்டுகள் தான். இந்த குறைந்த  அளவு தண்ணீருக்காக தான் உலகெங்கிலும் பெரும் போராட் டம் நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது உலகப்போர் என்று வந்தால், அது தண்ணீருக்காக தான் இருக்கும் என்று  விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். காலநிலை மாற்றத் தின் காரணமாக கிடைக்கும் தண்ணீரின் அளவு குறையும் போது உணவு உற்பத்தி குறையும். இதனால் உணவு ஏழைக ளுக்கு எட்டா கனியாகும். ஒவ்வொரு சொட்டு நீரும் உயிர்  நீர் என்பதை மக்கள் புரிந்து கொண்டு தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து, கி ஸ்டோன் அமைப்பைச் சேர்ந்த களப்பணியாளர்கள், தண்ணீர்  மாசு குறித்து மாணவர்களிடையே பரிசோதனை மூலமாக வும், விளையாட்டு மூலமாகவும் விளக்கி கூறினர்.