districts

img

படைப்புகளை மறைக்க முடியாது: சு.வெங்கடேசன் எம்.பி., பேச்சு

திருப்பூர், ஜன. 30 - அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான புத்தகங்களையோ, ஆவணப் படங்களையோ மறைக்கும் முயற்சி  எல்லா காலத்திலும் நடந்து வருவகிறது.  ஆனால் அவற்றை ஒருபோதும் மறைக்க முடியாது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரு மான எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறி னார்.  தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தி வரும் 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஞாயிறன்று நடந்த கருத்தரங்கில் சு. வெங்கடேசன், ‘சரித்திரத் தேர்ச்சிகொள்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சமூ கத்தை பயிற்றுவிக்கும் மகத்தான பங் களிப்பு அரசு நிர்வாகத்துக்கு உண்டு.  அதற்கு உதாரணம் இந்த புத்தக கண் காட்சி. அரிஸ்டாட்டில், கன்பூசியஸ், அர்த்தசாஸ்திரம் மற்றும் திருக்குறளை படியுங்கள். இந்த புத்தகக் கண்காட்சி  மேடை என்பது, அறிவின் திறந்த வாசல். அரிஸ்டாட்டில், கவுடில்யர் தொடங்கி  மனிதர்களை, மனித சமூகத்தை எப் படி மேலாண்மை செய்ய வேண்டும்  

என எழுதினார்கள். படை, கோட்டை,  உளவுப் பிரிவை எப்படி உருவாக்க வேண்டும் என பல நூல்கள் எழுதப்பட் டன. மனித மனதை எப்படி அறவழியில் நடத்துவது என பிரதானப்படுத்தியது திருவள்ளுவர் தான். மேலாடை அணி யத் தொடங்கிய காலம், மனித சமூகம்  நாகரீகம் தொட்ட காலம். அந்த ஆடைக்கு சங்க இலக்கியத்தில், 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு  12 சொற்கள் தமிழில்  மட்டுமே உள்ளது. இந்த பெருமை தமிழ்  மொழிக்கு மட்டுமே உண்டு. கடலில்  செலுத்தப்படும் வாகனத்துக்கு 24 சொற் கள் உண்டு. நொய்யல் நதிக்கரையின்  கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டவை யும், கரூரில் கண்டறியப்பட்டவையும், புகளூரின் கண்டறிப்பட்டவையும் தமிழ் சமூகத்தின் பெரிய அடையாளம். மூங் கிலை வெட்டினால், கண்ணும் தெரிந் தும், தெரியாமலும் ஒரு வெள்ளாடை  இருக்கும். இந்த ஆடையை சங்க இலக் கியம் சொல்கிறது. 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இலக்கியம் எழுதிய வர்கள் நம் பெண்கள். 40க்கும் மேற் பட்ட பெண்கள் எழுதிய பெண் படைப் பாளிகள் எழுதியது இலக்கிய வரலாறு. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக வெளியிடப்படுகின்ற புத்தகங் களோ, ஆவணப்படங்களையும் மறைப் பது அனைத்து காலத்திலும் நடை பெற்று வருகிறது. ஆனால் அவற்றை  ஒரு போதும் மறைக்க முடியாது என  வரலாறுகள் நமக்கு நினைவூட்டுகின் றன. இவ்வாறு அவர் பேசினார்.

;