தருமபுரி, அக்.27- பாலக்கோடு அருகே டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தோமல அள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் எதிர்ப்பினால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தற்போது அந்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சிகள் எடுக் கப்பட்டு வருகின்றன. இங்கு மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். இதனால் அதிகமான வாகன போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் இவ்வழியாக சென்று வர முடியாத சூழல் ஏற்படும். ஊரிலுள்ள இளைஞர் கள், பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாக மாறி, எதிர் காலம் பாதிக்கும் சூழல் உருவாகும். எனவே, இப்பகுதி யில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ் மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் பால சுந்தரம், போராட்டக்காரர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்க பட மாட்டாது என உறுதியளித்தார். அதன்பேரில் பெண்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், டாஸ்மாக் கடையை திறந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.