districts

img

மணிப்பூர் மகள்களைப் பாதுகாப்போம்! திருப்பூரில் பெண் வழக்கறிஞர்கள் ஆவேசம்

திருப்பூர், ஆக. 10 - மணிப்பூர் மகள்களைப் பாதுகாப் போம் என்ற முழக்கத்துடன் திருப்பூரில்  பெண் வழக்கறிஞர்கள் ஆவேச ஆர்ப் பாட்டம் நடத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக கலவரம் நடை பெற்று வரும் நிலையில் அதைக் கட்டுப் படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள்  தவறிவிட்டன. இந்த நிலையில் மணிப் பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், அங்குள்ள பெண்கள் உள்ளிட்ட அப் பாவி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வும் நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தலையீடு செய்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட பெண் வழக்கறிஞர்கள் கமிட்டி சார்பாக  வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக மணிப்பூர் மகள்களைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வழக்கறிஞர் எஸ்.ஏ.தமயந்தி அமர் நாத், டி.முத்துலட்சுமி, திங்களவள், ஜெ. சத்தியா, இந்திரா காந்தி, மோகனாம் பாள், சௌமியா ஆகியோர் தலைமை  ஏற்றனர். மூத்த வழக்கறிஞர்கள் பல்ல டம் வழக்கறிஞர் சங்கப் பொருளாளர்  சக்திதேவி, மல்லிகா, தமயந்தி, மாலதி,  அமுதா, பூங்கொடி, மெர்லின் அவிநாசி  சாந்தி உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்கள்  திரளானோர் கலந்து கொண்டனர். மணிப்பூரில் கலவரத்தை முடிவுக் குக் கொண்டு வர வேண்டும், அமைதி  திரும்பத் தேவையான நடவடிக்கை களை மத்திய மாநில அரசுகள் எடுக்க  வேண்டும், பெண்கள் மீதான வன்கொடு மைகளை செய்த குற்றவாளிகளைக் கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற வழி காட்டுதலை  மத்திய, மாநில அரசுகள்  முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இவர்களது ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சுந்த ரேசன், செயலாளர் கலாநிதி, ஊத்துக் குளி சுந்தர்ராஜ், அகில இந்திய வழக்கறி ஞர் சங்க மாவட்டச் செயலாளர் பி. மோகன், மூத்த வழக்கறிஞர் ஈ.என்.கந்த சாமி, கே.எஸ்.ராஜேந்திரன், திருப்பூர்  வழக்கறிஞர் சங்கச் செயலாளர் எஸ். பத்மநாபன், எஸ்.பொன்ராம், ஏ.அமர் நாத், தமிழ் கார்க்கி உள்ளிட்டோரும் பங் கேற்று கண்டனம் முழங்கினர்.