திருப்பூர், நவ.22- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மும் மூர்த்தி நகர் பகுதியில் உள்ள 200க்கும் மேற் பட்ட வீடுகளில், மழைநீருடன் கலந்து கழிவு நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள் ளானார்கள். பெரிய மழை பெய்யும் பொழு தெல்லாம் மழை நீர் வீடுகளுக்குள் வருவ தால் உரிய வடிகால் அமைத்துத் தர நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தப் போவ தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாயன்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. சாலை முழுக்க ஆறு போல் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. பாண்டியன் நகர், பூலுவ பட்டி, பி.என்.சாலை மும்மூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் ஓடிய மழைநீர் வெளியேற வழி யின்றி சாக்கடை நீருடன் கலந்து, தாழ்வான பகுதியாக உள்ள 8ஆவது வார்டுக்கு உட்பட்ட கருப்பராயன் நகர் பகுதியில் புகுந்தது. அங் குள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண் ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத் திற்கு ஆளானார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், பல ஆண்டுகளாக இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் இப்படித் தான் மழைநீர், சாக்கடை நீருடன் கலந்து வீடு களுக்குள் வந்து விடுகிறது. செவ்வாயன்று இரவு பெய்த மழையால் சாக்கடை நீர் வீடு களுக்குள் புகுந்துவிட்டது. குழந்தைகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரி யாமல், உறவினர்கள், தெரிந்தவர்கள் வீடுக ளுக்குச் சென்றுவிட்டோம். பாய், தலை யணை முதல் பிர்ட்ஜ், வாசிங் மிஷின் வரை அனைத்து பொருட்களும் சேதமாகிவிட்டன. வீடுகளுக்குள் முழங்கால் வரை மழைநீரு டன் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. வைரஸ் காய்ச்சல் பரவுவதாக கூறுகின்றனர். இங்கே புழுக்கள் மிதக்கும் கழிநீரில் இரவு முழுவதும் இருந்துள்ளோம். எங்களுக்கு என்ன நோய் வரப்போகிறது என்று தெரியவில்லை. உணவு சமைக்கக்கூட வழியில்லை, காலை மாநகராட்சி சார்பில் உணவு ஏற்பாடு செய்து தந்தார்கள். பல அதிகாரிகள் வந்து உரிய நட வடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனர். எப் போது என்றுதான் தெரியவில்லை. இம்முறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெ ரிய போராட்டத்தை நடத்துவோம் என்று கூறி னர். இதுகுறித்து 8ஆவது வார்டு கவுன்சிலர் வேலம்மாள் காந்தி கூறுகையில், கருப்பரா யன் நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாண்டியன் நகர், பூலு வபட்டி, மும்மூர்த்தி நகர் ஆகிய பகுதிகளிலி ருந்து வரும் மழை நீர், கழிவு நீர் அனைத்தும் கருப்பராயன் நகருக்குள் தான் வருகிறது. இங்கு இருந்து நீர் வெளியேற வழியின்றி வீடு களுக்குள் புகுந்துவிடுகிறது. இங்குள்ள 5 வீதி களிலும் சாக்கடை கால்வாய் கட்டுவதற்கு முன்பு, அரவந்தோட்டம் பழனிச்சாமி என்பவ ருக்குச் சொந்தமான நிலத்திற்குள் மழைநீர் சென்றுவிடும். இப்போது சாக்கடை நீரும் சேர்ந்து செல்வதால் விவசாய நிலம் பாதிப்ப டைவதாக கூறி, தனது விவசாய நிலத்தில் நீர் செல்ல நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி, மதில்சுவர் அமைத்துவிட்டார். இதனால் நீர் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நீர் செல்ல வழியின்றி, நீர் உறிஞ் சும் வாகனங்கள் மூலம் நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உள்ளது. ஏற்கனவே இப்ப குதியிலிருந்து குழாய் மூலம் கழிவு நீரை வெளியேற்ற ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. போயம்பாளையம் எஸ்.டி சாலை யில் உள்ள, டிஸ்போசல் (வெளியேற்றும்) பகுதிக்குச் செல்ல பழனிச்சாமியின் நிலத்தின் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும் என் பதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இந்நிலையில், செவ்வாயன்று பெய்த மழையில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவிட்டனர். தகவல் அறிந்து மேயர் நா.தினேஷ்குமார், மாநக ராட்சி அதிகாரிகள், காவல் துணை ஆணை யர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்ட னர். பழனிச்சாமியிடம் காலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைக்கு நீர் உறிஞ்சும் லாரியின் மூலம் 6 லாரிகளில் சுழற்சி முறை யில் நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை பெய்யும் பட்சத்தில், மக்களை பள்ளி யில் தங்கவைக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ ன்று தெரிவித்தார்.