திருப்பூர், ஏப்.3- கோடை காலம் தொடங்கிய நிலையில், பொதுமக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் குண்டம் திருவிழா விற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகைதருவார்கள். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தாண்டு வெயி லின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இக்கோவி லுக்கு நடந்து வரும் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் அவிநாசி கவுண்டப்பாளையம் கிளை, அங்கேரிப்பாளையம் கிளை, குமரன் காலனி கிளை, பெரு மாநல்லூர் ஆகிய கிளைகள் சார்பில் நீர் மோர் வழங்கப் பட்டது.