districts

வாக்கு இயந்திரங்கள் அறை சிசிடிவி கேமராவில் குளறுபடி

கரூர், மே 5-வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் குளறுபடி உள்ளதால் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறியுள்ளார். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் கரூர் தளவாப்பாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் செயல்படும் சிசிடிவி கேமராஇரண்டு மணி நேரம் வித்தியாசத்தில் இயங்கி வருவதாக வந்த புகாரினை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சனிக்கிழமை இரவு ஸ்டிராங் அறை வளாகத்தை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஏற்கனவே வாக்கு இயந்திரங்கள் போதிய பாதுகாப்புஅற்ற நிலையில் உள்ளதை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை ஆய்வு மேற்கொண்ட தேர்தல்ஆணையம், வேறு மாவட்ட காவலர்களை தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இந்நிலையில் சிசிடிவிகேமராக்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக செயல்படுவதாக எங்கள் முகவர் தெரிவித்தார். இதனையடுத்து நாங்கள் மே 3ம் தேதி இரவு 11.40 மணிக்கு பார்வையிட்டோம். அப்போதுசிசிடிவி கேமராவில் நேரம் 1.40 மணி என காட்டியது. இதன்படி இரண்டு மணி நேரம் கூடுதலான நேரத்தில் சிசிடிவி கேமரா செயல்பட்டால் பல்வேறு அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இது ஆபத்தான நிகழ்வாகும். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் நாங்கள் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் உங்களுக்கு தான் வாக்கு அளித்துள்ளோம். வாக்கு பெட்டிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு ஜோதிமணி கூறினார்.

;