ஈரோடு, ஜூன் 30- உள்ளூர் விவசாயிகளை புறக்க ணித்துவிட்டு வெளியூர் ஆட்களை வைத்து விதைத் தெளிப்பு செய்வதா என கேட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள், விவசாய கூலித்தொழிலாளர் கள், விவசாய சங்க தோழர்கள் மீது தாக் குதல் நடத்திய மயிலாடுதுறை காவல்து றையை கண்டித்து ஈரோட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கீழப் பருத்திகுடி வடக்கு தெரு பகுதிகளில் வசிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை தராமல் வெளியூர் ஆட்களை வைத்து நிலவுடமையாளர்கள் விதைத் தெளிப்பு செய்தனர். உள்ளூர் விவசாய தொழிலாளர்க ளுக்கு வேலை அளிக்க வேண்டும் என நியாயம் கேட்க சென்ற மார்க்சிஸ்ட் கட்சி யினர், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதனை கண்டித்து மாநிலம் முழுவ தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக ஈரோடு வட்ட, நசியனூர் பகுதியில் விதொச சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வ.இளங்கோ தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.மாரிமுத்து, விவசாய தொழிலா ளர் சங்கம் நிர்வாகி எம்.நாச்சிமுத்து, என்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் என். நாகராஜன், விவசாய தொழிலாளர் சங் கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் ஈரோடு தாலூக்கா செயலாளர் என்.பாலசுப்பிரமணி ஆகியோர் கண் டன உரையாற்றினர். முன்னதாக காவல் துறையினரின் நடவடிக்கையை கண் டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கள் முழக்கங்களை எழுப்பினர். முவில் சிந்தன் குட்டை சிபிஎம் கட்சி கிளை செய லாளர் சி.பி.தங்கவேல் நன்றி கூறி னார்.