districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கால்நடை வளர்ப்பு மருத்துவ ஆலோசகர் பயிற்சி

ஈரோடு, மே 24- கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், கால்நடை வளர்ப்பு மற்றும் மருத்துவ ஆலோசகர் தொடர்பான இலவச பயிற்சி முகாம் வருகின்ற 27 ஆம் தேதி துவங்க உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி, சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயிற்சியின் முடிவில் சான்றி தழ் வழங்கப்படும். 18 வய திற்குட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வறுமை கோட் டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது.

ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு

தி.க. ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மே 24- ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத்தினர் செவ்வாயன்று ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், வங்கித் தேர்வுகளில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை விட, உயர் வகுப்பினருக்கு பாதிக்கும் குறைவான கட் ஆப் மதிப்பேண்களே நிர்ணயம் செய்யப்படுகின்றன. இது கண்டனத்துக்குரியது. இந்த போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு, மே 24- ஈரோடு மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள் ளது. ஈரோடு மாவட்டத்தில் மே மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளர்ச்சி மன்ற கூட்ட  அரங்கில் வரும் வெள்ளி யன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.  அன் றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக் கள் பெறப்படும். 11.30 மணி  முதல் 12.30 மணி வரை விவ சாய சங்கப் பிரதிநிதிகள்  விவசாயம் தொடர்பான தங் களது பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்துக்கள் தெரி விக்கலாம். பிற்பகல் 12.30  முதல் 1.30 முடிய அலுவலர் களின் விளக்கங்கள் தெரி விக்கப்படவுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி யர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி அழைப்பு விடுத் துள்ளார்.

  நீதிமன்றத்தில் கோப்புகள் மாயம்

கோவை, மே 24- கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றி யமையாத பண்டங்கள் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் குமாஸ் தாவாக  பணியாற்றி வருபவர் மனோஜ் குமார். இவர் கடந்த சில மாதங்களாக முறையான தகவல் அளிக்காமல் அவ்வப் போது விடுமுறை எடுத்தார். இந்நிலையில் நீதிமன்ற அலுவலக அறையில் இருந்த 2 கோப்புகள் மாயமா னது. இதுகுறித்து நீதிபதி பரிந்துரையின் பேரில் தலைமை  குமாஸ்தா ரவீந்திரகுமார் பந்தய சாலை போலீஸ்  நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் குமாஸ்தா மனோஜ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

அவிநாசி, மே 24- குன்னத்தூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள் வதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் திங்களன்று காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 17  வயது சிறுமி கடந்த 11 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாகக்கூறி சென்றவர் திரும்பி வரவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசார ணையில், காங்கயம் மருதூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (19) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து குன்னத்தூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகேஷ் குமாரை கைது செய்தனர்.

3 கார்கள் அடுத்தடுத்து விபத்து

திருப்பூர், மே 24-  திருப்பூர் - அவிநாசி சாலை, அம்மாபாளையம் சோதனைச்சாவடி அருகே ஞாயிறன்று மாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை யின் குறுக்கே ஒரு நாய் ஓடி யது. அந்த நாய் மீது மோதா மல் இருக்க காரை ஓட்டி சென் றவர் திடீரென பிரேக் பிடித் தார். இதனால் அந்த கார்  மீது பின்னால் வந்த மற் றொரு கார் மோதியது. 2 கார் களும் அடுத்தடுத்து மோதிய வேகத்தில் அதற்கு பின்னால் 3 ஆவதாக வந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ்.எம்.ஆனந்தன் காரும் எதிர்பாராதவிதமாக மோதி யது. இவ்விபத்தில் அனை வரும் காயமின்றி உயிர் தப் பினர். திருமுருகன்பூண்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

தாராபுரம், மே 24- தாராபுரம் அருகே கிணற்று மோட்டார் அகற்றும் பணி யின் போது, கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த செலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் ராம் நிவாஸ் (26). இவர் வழக்கம்போல வேலைக்கு செல்வ தற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது  அதேபகுதியைச் சேர்ந்த மின்மோட்டார் பழுதுபார்க்கும் மாரப்பன் என்பவர் கிணற்றில் இருக்கும் மின்மோட்டாரை கழற்றுவதற்கு உதவி செய்யுமாறு ராம் நிவாஸிடம் கேட் டுள்ளார். இதையடுத்து கிணற்றுக்குள் இறங்கிய ராம்  நிவாஸ் உதவி செய்ய முற்பட்ட போது மின் மோட்டாரில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த ராம் நிவாஸ் நீண்ட  நேரமாக மேலே வரவில்லை. இச்சம்பவம் குறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச் சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி தண்ணீரில் சிக்கிக்கொண்ட ராம் நிவாசை சடலமாக மீட்டனர். இதன்பின் ராம் நிவாஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச் சம்பவம் குறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

 

 

;