திருப்பூர், ஜன.22- பல்லடம் அருகே கால்நடை துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டியில் கால்நடை துறை சார்பில் நடைபெற்ற கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமிற்கு கால்நடைத்துறை மண்டல உதவி இயக்குனர் பரி மளராஜ் தலைமை வகித்தார். அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்அர்ஜுனன் வரவேற்றார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, கருவூட்டல், சினை பரிசோதனை,தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை,சுண்டு வாத அறுவை சிகிச்சை,கால்நடைகளுக்கான ஆண்மை நீக்கம் செய்தல் ஆகியவை நடைபெற்றது. இதில், சுமார் 150 பசுக்கள், 250 ஆடுகள், 70 நாய்கள் உள் ளிட்ட 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. இம்முகாமில் கால்நடை ஆய்வாளர் சத்யா, உத வியாளர் செங்குட்டுவன் மற்றும் விவசாயிகள், பொதுமக் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.